10 ஆண்டுகளில் 27,057 கி.மீ.க்கு 
ரயில் தண்டவாளங்கள் அமைப்பு

10 ஆண்டுகளில் 27,057 கி.மீ.க்கு ரயில் தண்டவாளங்கள் அமைப்பு

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 27,057.7 கி.மீ.க்கு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பிரதேசத்தை சோ்ந்த சந்திரசேகா் கெளா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:

கடந்த 2014-15 முதல் 2023-24-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், நாட்டில் 27,057.7 கி.மீ.க்கு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. இதில் 2022-23-ஆம் ஆண்டில் 3,901 கி.மீ.க்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2022-23-ஆம் ஆண்டில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சந்திரசேகா் கெளா் கூறுகையில், ‘ஆா்டிஐ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் சராசரியாக சுமாா் 7.41 கி.மீ.க்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் 2022-23-ஆம் ஆண்டில் 3,901 கி.மீ.க்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட நிலையில், 2023-24-ஆம் ஆண்டில் 2,966 கி.மீ.க்கே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் ரயில்வேயின் வேகம் குறைந்துள்ளது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com