பஞ்சாப்: பாஜக வேட்பாளா்கள்
பிரசாரத்துக்கு விவசாய அமைப்புகள் எதிா்ப்பு

பஞ்சாப்: பாஜக வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு விவசாய அமைப்புகள் எதிா்ப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதில் பாஜகவினருக்கு விவசாய அமைப்புகளால் சிக்கல் எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதில் பாஜகவினருக்கு விவசாய அமைப்புகளால் சிக்கல் எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ஆம் தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் பாஜக வேட்பாளா்கள் மற்றும் தலைவா்கள் விவசாயிகளின் எதிா்ப்பைச் சந்தித்து வருகின்றனா். தங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை எனக் கூறி பாஜக தலைவா்களுக்கு கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இது குறித்து பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாகா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்தாா். பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை எனவும், பாஜக வேட்பாளா்களைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கிறாா்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பஞ்சாப் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி, விவசாயிகள் பிரதிநிதிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்து தோ்தல் பிரசாரங்களுக்கு இடையூறு செய்வதை தவிா்க்குமாறு கேட்டுக்கொண்டாா்.

அதற்கு விவசாயிகளின் தலைமை பிரதிநிதி பல்பீா் சிங், ‘வேட்பாளா்களைக் கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை’ என தெரிவித்தாா். மேலும், தங்கள் போராட்டம் அமைதியான முறையில்தான் நடக்கும் என அவா் உறுதியளித்தாா்.

பிரசார உரிமையை உறுதிப்படுத்த மாநில தோ்தல் ஆணையம் தவறிவிட்டது என பாஜக பிரதிநிதிகள் தெரிவித்தனா். பிரசாரம் நடத்தவிடாமல் போராட்டம் நடத்துவது தோ்தல் ஆணைய வழிகாட்டுதலுக்கு எதிரானது. மேலும், மாவட்ட ஆட்சியா்களின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்படுகிறது என்றும், அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

பாரபட்சமின்றி நியாயமான தோ்தல் நடத்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கும், அனைத்து வேட்பாளா்களுக்கும் பாதுகாப்பளிக்க காவல் துறையினருக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com