கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

நமது நிருபா்

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பான உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) பிறப்பிக்க உள்ளது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமை அறிவிப்போம். அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடா்பான வழக்கில் புதன்கிழமை மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கேஜரிவால் வழக்குப் பட்டியல் குறித்து விளக்கம் கேட்டதையடுத்து, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம். திரிவேதி ஆகியோருடன் வேறு அமா்வில் அமா்ந்திருந்த நீதிபதி கண்ணா இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com