பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகார்!

ஹாசன் எம்.பி. மீது புதிய பாலியல் புகார் பதிவு!
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா ஐஏஎன்எஸ்

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பியும் மத சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகாரை வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளது சிறப்புப் புலனாய்வு படை (எஸ்.ஐ.டி)

சிறப்புப் புலனாய்வு படையால் மீட்கப்பட்ட அந்த பெண், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி. ரேவண்ணாவால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிக்கு முன் குற்றவியல் சட்டப் பிரிவு 164-ன் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சன்னராயப்பட்டனா கிராமத்தில் உள்ள பண்ணைவீட்டில் எஸ்.ஐ.டி அதிகாரிகள் நேரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பண்ணையில் பணிபுரியும்போதுதான் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு தான் உள்ளாக்கப்பட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

62 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணின் விடியோவில் அவர் கால்களில் விழுந்து கெஞ்சுவதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி ஆளுநரைச் சந்தித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர், பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்படவில்லை, அவரது உறவினர் வீட்டில் இருந்து எஸ்.ஐ.டி அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com