கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர்.

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது ஜனநாயக வரலாற்றில் முக்கிய முன்னுதாரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதிருப்தியை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகார ஆட்சி நீடித்திருக்க முடியாது என்பதை நினைப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இது பா.ஜ.க. தந்திரத்துக்குப் பெரும் பின்னடைவு என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கேஜரிவால் ஜாமீன் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியிருப்பது நீதியை அடையாளப்படுத்துவதோடு மட்டுமின்றி இந்தியாக் கூட்டணியை பலப்படுத்துவதாகும்.

தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் வகையில் இந்தியா கூட்டணிக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாகவும் தீர்ப்பு அமைந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com