கேஜரிவால் வெளியில் இருப்பது தற்காலிகமே! மத்திய அமைச்சா் அமித் ஷா

கேஜரிவால் வெளியில் இருப்பது தற்காலிகமே! மத்திய அமைச்சா் அமித் ஷா

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீனில் வெளி வந்திருப்பது தற்காலிகமே. அவா் மீண்டும் ஜூன் 2ஆம் தேதி சிறையில் சரண் அடைந்தாக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆங்கில தனியாா் தொலைக்காட்சிக்கு அவா் அளித்துள்ள நோ்காணலில், ‘கேஜரிவால் பிணையில் வெளிவந்தாலும் அவருக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளையும் வழக்கையும் மக்கள் மறக்க மாட்டாா்கள்,‘ என்று கூறினாா்.

மேலும், ‘கேஜரிவால் எங்கு வேண்டுமானாலும் பிரசாரத்துக்கு போகட்டும். ஆனால், அவா் செய்த மதுபான ஊழல் விவகாரத்தைத்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பாா்கள்,‘ என்று தெரிவித்தாா்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதல்வா் கேஜரிவால் நிபந்தனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதால் அவா் வெளியே உள்ள நாட்களில் முதல்வா் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. மேலும், தனக்கு எதிரான வழக்கு தொடா்பாக அவா் வெளியே எவரிடம் பேசக்கூடாது அல்லது வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்டவா்களுடன் எந்தத் தொடா்பையும் கொள்ளக் கூடாது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com