பாஜக வென்றால் ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலடைப்பார்கள்: கேஜரிவால்

பாஜக வென்றால் ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலடைப்பார்கள் என்று கேஜரிவால் கூறினார்.
பாஜக வென்றால் ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலடைப்பார்கள்: கேஜரிவால்

மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால், ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலமைப்பார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கில், மார்ச் 21ஆம் தேதி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

50 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

இன்று தில்லியில் உள்ள அனுமன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேஜரிவால், ஆம் ஆத்மியை அழித்துவிட வேண்டும் என்று என்னென்னவோ செய்தார்கள். முடியவில்லை. இறுதியாக என்னை சிறையில் தள்ளியிருக்கிறார்கள். நான் சிறையில் இருக்கும் போது, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏன் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்று கேட்டார்கள், கடந்த 75 ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன, ஆனால், தில்லியில் வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. இந்த அளவுக்கு பெரும்பான்மையுடன் எந்த மாநிலத்திலும் ஆட்சியமையவில்லை.

என்னைப் போலவே ஹேமந்த் சோரனும் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை. இந்த சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துதான் சிறையிலிருந்து நான் போராடி வருகிறேன்.

ஒருவேளை, நீங்கள் வாக்களித்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சிறையிலடைக்கும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com