பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!

தேவி பாடன் கோயிலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார்.
பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!

உத்தரப் பிரதேசத்தின் துளசிபூரில் உள்ள தேவி பாடன் கோயிலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர பிரசாரத்திற்கு மத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தேவி பாடன் மாதா கோயிலில் இன்று காலை வழிபாடு செய்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை ஆறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார் மற்றும் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். சரவ்ஸ்தி மக்களவைத் தொகுதியில் தனது இறுதி பொது உரையைத் தொடர்ந்து, பல்ராம்பூரில் உள்ள துளசிபூர் தேவிபாடன் கோயிலில் இரவு தங்கினார்.

பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!
டெம்போவில் ராகுல் காந்தி!

இன்று காலை தேவிபாடன் துர்கா தேவியை வழிபட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மக்கள் நலம்பெற வேண்டினார்.

முதல்வர் யோகி பல்ராம்பூருக்குச் செல்லும்போதெல்லாம் துர்கா தேவி கோயிலுக்குச் செல்வது வழக்கமாகும். வழிபாட்டுக்குப் பிறகு அவர் அங்குள்ள பக்தர்களுடன் உரையாடினார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு முதல்வரை வரவேற்றனர்.

பின்னர் அவர் கோயிலில் உள்ள கோ சாலைக்குச் சென்று அங்குள்ள பசுகளுக்கு வெல்லம் மற்றும் ரொட்டியைக் கொடுத்தார். தொழிலாளர்களுக்கு பசு பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com