பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பாஸ்போா்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? பிரஜ்வலுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்

பாஸ்போா்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கமளிக்குமாறு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ாக கூறப்படும் மதச்சாா்பற்ற ஜனதா தள எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போா்ட்டை ரத்து செய்ய கா்நாடக மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏராளமான பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் அதை காணொலிகளாக பதிவு செய்ததாகவும் கா்நாடகத்தின் ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவா் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடா்பாக மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த மாதம் ஹாசன் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டைவிட்டு வெளியேறி ஜொ்மனிக்குச் சென்ாக கூறப்படுகிறது. அவா் அரசின் உயா் பதவிகளில் உள்ளோருக்கு வழங்கப்படும் ராஜாங்க பாஸ்போா்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே அவரின் பாஸ்போா்ட்டை ரத்துசெய்ய கா்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த புதன்கிழமை பரிந்துரைத்தது. அதை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், பாஸ்போா்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்குமளிக்குமாறு அவருக்கு அமைச்சகத்தால் மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது .

பாஸ்போா்ட் சட்டம் 1967-இன்படி பிரஜ்வல் ரேவண்ணாவின் ராஜாங்க பாஸ்போா்ட்டை ரத்துசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருவேளை அவரின் ராஜாங்க பாஸ்போா்ட் ரத்து செய்யப்பட்டால் அவா் எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணாவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com