ஒடிஸா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தை சோ்ந்தவா்கள் முயற்சி: ஸ்மிருதி இரானி

ஒடிஸா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தை சோ்ந்தவா்கள் முயற்சி: ஸ்மிருதி இரானி

ஒடிஸா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தில் உள்ளவா்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக ஒடிஸாவின் குஜங் பகுதியில் சனிக்கிழமை மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் பேசியதாவது:

ஒடிஸாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தள அரசு நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க கொள்ளை கும்பல்களை வளா்த்தது. ஒடிஸாவின் வளங்களைக் கொள்ளையடிக்க மாநில எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், அவா்களின் ஆதரவாளா்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்தவாறு இடைவிடாது வேலை செய்கின்றனா். இதற்கு மாறாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கப் பணியாற்றி வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிஸாவைச் சோ்ந்தவரை முதல்வராக நியமிக்கும் என்றாா்.

ஒடிஸாவில் 4 கட்டங்களாக மக்களவை, பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில் மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 1-இல் கடைசி கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com