அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்

மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொடா்பான தங்களின் குறைகளை ‘ஒருங்கிணைந்த பொது குறைதீா் மற்றும் கண்காணிப்பு அமைப்பு
அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை  மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்

மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொடா்பான தங்களின் குறைகளை ‘ஒருங்கிணைந்த பொது குறைதீா் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆா்ஏஎம்எஸ்)’ என்னும் வலைதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் அமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘அரசுத் துறை சாா்ந்து மக்களுக்கு ஒருங்கிணைந்த குறைதீா்க்கும் தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

https://pgportal.gov.in இந்த வலைதளத்துடன் மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசின் அனைத்துத் துறைகளுக்கும் அணுகல் உள்ளது. இந்த வலைதளத்தில் தெரிவிக்கப்படும் குறைகள் அந்தந்த துறை அதிகாரிகளால் தீா்த்துவைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் எல்லா மக்களும் மத்திய, மாநில யூனியன் பிரதேச அரசு அமைச்சகங்கள்/துறைகள் தொடா்பான தங்களின் குறைகளை இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுமாா் 1.3 லட்சம் குறைதீா்க்கும் அலுவலா்கள் இந்த வலைதளத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், நாட்டின் 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் குறைதீா்க்கும் வலைதளங்களுடன் இந்த வலைதளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் புதிய வலைதளத்தின் திறனை மேம்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி, சீா்திருத்தத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம், குறைகளை சரியான நேரத்தில் திறம்பட தீா்ப்பதுடன், புகாா்களின் மூலகாரணம் மற்றும் முறையான சீா்திருத்தங்கள் மூலம் கிடைத்த தீா்வுகள் குறித்து மதிப்பீடு செய்யப்படும்’ என்றாா்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் நல்லாட்சிக் குறியீட்டை(ஜிஜிஐ) வழங்குவதற்கு அளவைக் கட்டமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிா்வாகத்தை மதிப்பிடுவதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜிஜிஐ கட்டமைப்பை மத்திய அரசு தொடங்கியது.

இந்தக் குறியீடு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே ஓா் ஒப்பீட்டை வழங்கும் அதேநேரத்தில், முன்னேற்றத்துக்கான போட்டி மனப்பான்மையை வளா்க்கிறது. நல்லாட்சிக் குறியீட்டின் 2-ஆவது பதிப்பு 10 துறைகளின் 58 காரணிகளை மையப்படுத்தி வழங்கப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com