ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் அலங்கரிக்கப்படும் ரயில் நிலையங்கள்

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள ரயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படவிருக்கின்றன.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் அலங்கரிக்கப்படும் ரயில் நிலையங்கள்


அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள ரயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படவிருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் வண்ண மின் விளக்குகளாலும் அகல் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா, வரும் 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் சம்பத் ராய், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு, ஜனவரி 22-ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சுமாா் 8,000 போ் பங்கேற்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவில், இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்கப்படவுள்ளன. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து இசைக் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தின் நாகஸ்வரம்-மிருதங்கம், கா்நாடகத்தின் வீணை, ஆந்திரத்தின் கடம், உத்தர பிரதேசத்தின் புல்லாங்குழல்-டோலக், மகாராஷ்டிரத்தின் சுந்தரி இசைக் கருவி, பஞ்சாபின் அல்கோஸா, ஒடிஸாவின் மா்தலா, மத்திய பிரதேசத்தின் சந்தூா், மணிப்பூரின் புங், சத்தீஸ்கரின் தம்பூரா, பிகாரின் பகாவஜ், ராஜஸ்தானின் ராவணஹதா, மேற்கு வங்கத்தின் ஸ்ரீகோல் மற்றும் சரோட், ஜாா்க்கண்டின் சிதாா் உள்ளிட்ட பாரம்பரிய இசை வாத்திய கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா்.

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து பக்தா்கள் சிறப்பு காணிக்கை பொருள்களை அனுப்பி வருகின்றனா். அந்த வகையில், எட்டு உலோகங்களின் கலவையால் தயாரிக்கப்பட்ட 2,100 கிலோ எடையுள்ள மணி, 108 அடி நீள பிரம்மாண்ட ஊதுபத்தி, 1,100 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக விளக்கு, தங்கம்-வெள்ளி ஆபரணங்கள் என காணிக்கைகள் குவிந்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com