புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மேற்கு வங்க பயணம் திடீர் ஒத்திவைப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இரண்டு நாள் மேற்கு வங்க பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 12:42 pm

DIN

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இரண்டு நாள் மேற்கு வங்க பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தின் 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் 18-ஐ கைப்பற்றிய பாஜக, வரவிருக்கும் தேர்தலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள்கள் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அங்கு மெதினிபூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து கட்யின் அமைப்புக் கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டிருத்தார். 

தற்போது அமித்ஷாவின் இரண்டு நாள் மேற்கு வங்க பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தலைவர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.