தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி: கெரகோடு கிராமத்தில் 144 தடை!

கர்நாடகத்தில் அனுமன் கொடியை ஏற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கெரகோடு கிராமத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் அனுமன் கொடியை ஏற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கெரகோடு கிராமத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கொடிக்கம்பம் வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருக்கிறது. அதற்காக நிறுவப்பட்ட 108 அடி கொடிக் கம்பத்தில் ஜனவரி 26-ம் தேதி தேசியக் கொடிக்குப் பதிலாக அனுமன் கொடியை ஏற்றியுள்ளனர். 

தகவல் அறிந்து தேசியக் கொடியை அகற்றச் சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியும், கடைகளை அடைத்தும்  போராட்டம் நடத்தியுள்ளனர். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், கெரகோடு கிராமத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு நிலைமை மோசடைந்ததால் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அனுமன் கொடி இறக்கப்பட்டு தேசிய கோடி ஏற்றப்பட்டது. 

இதைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெரகோடு கிராமத்தில் தொடர் பதற்றம் நிலவி வருவதையடுத்து அங்கு 144 உடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com