ஐந்து குண்டுகள்

ஐந்து குண்டுகள்

ஐந்து குண்டுகள் கதை, 1900 தொடக்கத்தில் இருந்து 2012 வரையிலான காலகட்டத்தில், வேறு வேறு இடங்களில் நிகழ்கிறது. தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்படை வீரன் முத்துராசா, வ.உ.சி.யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுதேசிப் போராளியாக மாறுகிறான். போராளிகளை அடக்கவரும் தனிப்படைத் தலைவனான ஆண்டர்ஸன் என்பவனுக்கும், அங்கே கடல் முத்துகள் பற்றி கற்க வரும் ஆனி என்பவளுக்கும் நிச்சயம் ஆன நிலையில், அவள் முத்துராசாவின் குணங்களால் ஈர்க்கப்படுகிறாள். முத்துராசா மீது ஆண்டர்ஸன் கோபம் கொள்வதை அறிந்த எதிரிகள், அதைப் பயன்படுத்தி முத்துராசாவை தீர்த்துக்கட்ட திட்டமிடுகின்றனர். தடுக்க வரும் ஆனியும் முத்துராசாவும், நடக்கும் விபரீதத்தில் பிரிக்கப்படுகின்றனர்.

நூறாண்டுகள் கழிந்த நிலையில், ஆனியின் உயிலின்படி பெருந்தொகை ஒன்று முத்துராசாவின் குடும்பத்துக்கு வர இருக்கிறது. முத்துராசாவின் சந்ததியினரைத் தேடி லிண்டா என்பவர் வர, தகவல் குறைவாக உள்ள நிலையில் அவரது தேடுதல் சிக்கலாகிறது. தேடுவதற்கு ஒரு தடயமாக, ஐந்து குண்டுகள் மட்டும் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று ஆனியால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி கிடைத்ததா, முத்துராசாவின் சந்ததியினருக்குத் பணம் வந்து சேர்ந்ததா என்பதைக் கதை சொல்லும்.

இந்தத் தொடர் நாவலின் வரலாற்றுப் பின்னணி, கதையின் கற்பனை நிகழ்வுகளுக்குச் சாதகமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

சுதாகர் கஸ்தூரி

சுதாகர் கஸ்தூரி

மும்பையில் வசித்துவரும் சுதாகர் கஸ்தூரி, அறிவியல் சார்ந்த புனைகதைகள், மரபு சார்ந்த கதைகளை எழுதி வருபவர். 2012-ல் வெளியான அவரது முதல் அறிவியல் நாவல் 6174, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. 2014-ல் வெளியான 7.83 ஹெர்ட்ஸ் என்ற நாவலும் அறிவியல் புலன் சார்ந்தது. 2015-ல், ஜன்னல் இதழில் டர்மரின் என்ற அறிவியல் மர்மத் தொடர்கதை வெளியானது. தற்போதும், பல்வேறு தளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை