குரு - சிஷ்யன்

‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேள்விகள் கேட்டபடியே இருக்கும் சிஷ்யன். அவனுக்குப் பதில் அளிப்பதன் மூலம் எளிமையாக உலக உண்மைகளைப் புரியவைக்கும் குருநாதர். இருவருக்கும் இடையே பரிமாற்றம் பெறும் வார்த்தைகள், நிலவும் மௌனம், நிகழும் அனுபவம்.. இவை நாம் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கும் பாடங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், குருவும் சிஷ்யனும் நமக்கு வெளியே இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். நமக்கு உள்ளேயே இருப்பதாகவும் கருத்தில் கொள்ளலாம்.

ஜி. கௌதம்

ஜி. கௌதம்

இயற்பெயர், ஜி. கௌதமன். படித்தது, பொறியியலில் இயந்திரவியல். ஆனால் சிறுவயதில் இருந்தே இதழியலில் இருந்த ஆர்வம் ஆனந்த விகடனின் மாணவப் பத்திரிகையாளராக ஆக்கியது. மிகச்சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று, முழு நேர விகடன் பணியில் சேர்ந்தார். ஆனந்த விகடன் நிறுவனத்தின் ‘ஜூனியர் போஸ்ட்’ வார இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். 

பின்னர், இந்தியன் எக்ஸ்பிரஸ், குமுதம், குங்குமம் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் உயர் பதவிகள் வகித்திருக்கிறார். அதன்பின்னர், காட்சி ஊடகத்தின் மீது கவனம் செலுத்தினார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயா டிவியில் க்ரியேடிவ் மேனேஜராகவும், மக்கள் தொலைக்காட்சியில் தலைவராகவும், பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தில் தலைவராகவும், வெளிச்சம் டிவியில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி இருக்கிறார். சொந்த ஊர் திண்டுக்கல்.

படிக்கும்போது, காட்சியை அப்படியே கண்முன் நிறுத்துவது இவரது எழுத்துக்கான சிறப்பம்சம். இவர் எழுதிய புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மற்றும் விகடன் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

கற்பனைக்கு ஒப்பனை கொடுத்து தினமணி ஜங்ஷன் வாசகர்களுக்காக இவர் எழுதும் ‘குரு - சிஷ்யன்’ வாசிக்கும்போது, மிக எளிமையாகவும், வாசித்தபின்னர் மிக வலிமையாகவும் நிச்சயம் இருக்கும். வாசிக்கவும், யோசிக்கவும், வாழ்வை நேசிக்கவும் வைக்கும்.

தொடர்புக்கு, ggowtham@ggowtham.com / +91-98410 77789

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை