ஜீவ்ஸ் சிவசாமி

நகைச்சுவை வள்ளல்கள் என்றால் என் நினைவுக்கு வருபவர்கள் பி.ஜி. உட்ஹவுஸ், கல்கி மற்றும் தேவன் மட்டும்தான். உட்ஹவுஸின் சிறப்புக் கதாபாத்திரங்கள் ஜீவ்ஸ் மற்றும் அவருடைய எஜமானன் பெர்ட்டி ஊஸ்ட்டர். பின்னவர் பசையுள்ளவர்; ஆனால் கொஞ்சம் அசடு. முன்னவரின் உடம்புபூராக மூளை இருப்பதன் காரணம் மீன் சாப்பிடுவதினாலாம். ஊஸ்ட்டரை ஜீவ்ஸ் எவ்வாறு மறைமுகமாகக் கிண்டலடிக்கிறார். இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார் என்பதைப் படித்துத்தான் உணர வேண்டும். இவர்கள் இருவரையும் வைத்து நகைச்சுவை விருந்து படைத்த உட்ஹவுஸின் கற்பனை வளமும் ஆங்கிலத்தின் செழிப்பும், நவீனமும், 90 ஆண்டுகள் தாண்டியும் படிக்க சுகமாக, இதமாக இலக்கியத்தரத்துடன் மிளிர்வது கண்கூடு. இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் விளைவே இத்தொடர். ஊஸ்ட்டர் ரோலில் டாக்டர் பஞ்சாமி; ஜீவ்ஸ் ரோலில் சிவசாமி. மற்றபடி கதை, சம்பவம், உரையாடல் எல்லாம் என்னுடைய சொந்தக் கற்பனையே. ரசிப்பீர்கள், சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை