கனவுக்கன்னிகள்


வெறும் தகவல்களாக எழுதிக் குவிக்காமல், படிக்கும் வாசகனைக் கால எந்திரத்தில் ஏற்றி வரலாறு நிகழும் காலத்துக்கே அழைத்துச் சென்று, வாய் பிளக்கச் செய்யும் எழுத்து மேஜிக் தெரிந்த தமிழ் எழுத்தாளர் பா.தீனதயாளன். எழுத்தை ஆழமாக நேசிப்பவர். பரந்து விரிந்த பத்திரிகையுலக அனுபவத்துக்குச் சொந்தக்காரர். 

கடந்த எண்பது ஆண்டு கால தமிழ் சினிமாவை, வெறும் சினிமாவாக மட்டும் பார்க்காமல், அந்தந்த காலகட்ட மக்களின் வாழ்வியலோடு, அரசியலோடு பொருத்திப் பார்த்து ரசிப்பது தீனதயாளனின் குணம். அதுவே அவரது எழுத்தின் ஆகப்பெரிய பலமும்கூட. 

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், சாண்டோ சின்னப்பா தேவர், சிலுக்கு - என அவர் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அந்தப் புத்தகங்களில் வெறுமனே அந்தந்த நட்சத்திரங்களின் சினிமா வாழ்க்கையை, சொந்த வாழ்க்கையை மட்டும் சொல்லாமல், அந்தந்த கால தமிழ் சினிமாவின் வரலாற்றையுமே சேர்த்து பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஒரு காலத்தில் கோலோச்சி, ரசிகர்களின் மனத்தில் கனவுக் கன்னியாக வலம் வந்து, நடிப்பின் உச்சம் தொட்டு, தனி முத்திரை பதித்துச் சென்ற ‘நாயகிகள்’ பற்றிய தொடர் இது. இதுவரை வெளிவராத தகவல்களுடன், ரசிகர்கள் எதிர்பாராத ஆச்சரியங்களுடன் இந்தத் தொடர் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை