மறக்க முடியாத திரை முகங்கள்!

மறக்க முடியாத திரை முகங்கள்!

ஒரு இயக்குநரின் பெரும் கனவும் உழைப்பும்தான் சினிமா. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர் என அவர் கூட்டணியுடன் களம் இறங்கி அக்கனவை திரையாக்கம் செய்கிறார். ஒரு படம் பார்த்த ரசிகன் பொதுவாக அப்படத்தின் கதாநாயகன் அல்லது கதாநாயகியை சிலாகிப்பார்கள். அபூர்வமாக சிலர் வில்லன் நடிகர்களை புகழ்வார்கள். இதற்கிடையில் ‘கேரக்டர் ஆர்டிஸ்ட்’ என்று கூறப்படும் துணை நடிகர்கள் படத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் எளிதில் மறக்கடிக்கப்படுவார்கள். நாம் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாக அவர்களைப் பார்த்திருந்தாலும், நம் மனதில் அத்தனை எளிதாக அவர்கள் இடம் பிடித்திருக்கமாட்டார்கள். இந்தத் தொடர் அத்தகைய முகங்களை ஒரு ரசிகப் பார்வையில் பதிவு செய்கிறது.

உமா ஷக்தி.

உமா ஷக்தி.

உமா ஷக்தி எனும் புனைப்பெயரில் எழுதி வரும் உமா பார்வதி, தினமணி இணையதளத்தில் பணிபுரிகிறார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மற்றும் சினிமா விமரிசகர்.

வேட்கையின் நிறம், பனிப் பாலை பெண் (கவிதை), திரைவழிப் பயணம், சாம்பல் பூத்த மலர்கள் (உலக சினிமா கட்டுரைகள்), நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை (சிறுகதை தொகுப்பு), நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் (குறுநாவல்) ஆகியவை இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்.

இதில்  நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை தொகுதி க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை