நேரா யோசி

நேரா யோசி

பலவிதமான செய்திகள் நம்மைப் பலகோணங்களில் அனுகணமும் தாக்குகின்றன. அவை பெரும்பாலும் செய்திகளாக மட்டும் இருப்பதில்லை. நம் சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தச் செய்யும் தூண்டுதல்களாகவும், மூளைச்சலவையின் முக்கியத் தூதர்களாகவும் அவை இருப்பதைக் கண்கூடாகக் காண முடியும். இதனால், எந்தத் தாக்கத்தையும் சந்தேகத்தோடும், இயல்புக்கு மாறாகவும் மட்டுமே அணுக நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். 
 
செய்திகளின் அடிப்படை நோக்கத்தை நம்மால் எப்போதும் புரிந்துகொண்டுவிட முடிவதில்லை என்பது யதார்த்தத்தின் சவால். செய்திகளை, உணர்வுகளைத் தாக்கும் நிகழ்வுகளை எப்படி உள் வாங்குகிறோம்? அவற்றுக்கு எப்படி எதிர்வினை செய்கிறோம்? என்பது நம் சிந்தனைத் திறனையும், மன ஆளுமையையும் பொறுத்தது. சரியாக அளவிட்டு, நேராகச் சிந்திப்பது ஒரு திறன். இத்திறனை எப்படி வளர்ப்பது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம். 
 
பழக்கங்களின் உளவியல் கூறுகளைப் பல வல்லுநர்கள் எழுதிய நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறேன். அத்துடன், இயல்பான சில நிகழ்வுகளையும் சேர்த்து அவற்றை உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். நான் உளவியல் அறிஞனோ, அல்லது ஆய்வாளனோ அல்ல. படித்ததிலும், பார்த்ததிலும், அனுபவத்திலிருந்தும் கற்றதை ஒரு கோர்வையாக்கிக் கொடுக்க முயன்றிருக்கிறேன். மேலதிகத் தகவல்களையும், உசாத்துணைகளையும் கட்டுரைகளின் இறுதியில் கொடுத்திருக்கிறேன். அம்மூல நூல்களை வாசகர்கள் படித்து மேலும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுதாகர் கஸ்தூரி.

சுதாகர் கஸ்தூரி.

மும்பையில் வசித்துவரும் சுதாகர் கஸ்தூரி, அறிவியல் சார்ந்த புனைகதைகள், மரபு சார்ந்த கதைகளை எழுதி வருபவர். 2012-ல் வெளியான அவரது முதல் அறிவியல் நாவல் 6174, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. 2014-ல் வெளியான 7.83 ஹெர்ட்ஸ் என்ற நாவலும் அறிவியல் புலன் சார்ந்தது. 2015-ல், ஜன்னல் இதழில் டர்மரின் என்ற அறிவியல் மர்மத் தொடர்கதை வெளியானது. தற்போதும், பல்வேறு தளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தினமணி இணையதளத்தில் ஐந்து குண்டுகள் (http://www.dinamani.com/junction/five-bullets) என்ற தொடரை எழுதியுள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை