பாலக்காடு சமையல்

பாலக்காடு சமையல்

உணவே பிரபஞ்சத்தின் சுழற்சி என்கிறது தைத்ரிய உபநிடதம். மனித நாகரிகத்தின் வரலாறு அவனது உணவுத் தேடலில் இருந்துதான் துவங்குகிறது. வேட்டையாடி பச்சை இறைச்சியை உண்ண ஆரம்பித்ததில் இருந்து துவங்கியது மனிதக் கலாசாரத்தின் வளர்ச்சி. ஆரம்பத்தில் உணவை நோக்கி மட்டும்தான் அவன் சிந்தனையும் தேடலும் இருந்தது. சிக்கிமுக்கி கற்களுக்குள் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி ஒளிந்திருப்பதை ஆதிமனிதன் கண்டறிந்த அன்று முதல் இன்று வரை, உணவு என்ற ஒன்றின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? 

மனித நாகரிகத்துக்கு இணையாக உணவு நாகரிகமும் வளர்ந்து வந்திருக்கிறது. பச்சையாக உண்ணப்பட்ட உணவு இன்று பக்குவப்படுத்தப்பட்டு (சமைக்க) உண்ண ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவைப் பற்றி அக்காலம் முதல் இக்காலம் வரையிலான பல பதிவுகள் அக்கால இலக்கியத்திலும், இக்கால இணையத்திலும் உள்ளன. ஆசிரியர் வித்யா சுப்ரமணியம், ‘பாலக்காடு சமையல்’ என்ற இத்தொடரில், பாரம்பரியமான பாலக்காடு சமையல் ரெசிப்பிகளையும், அதன் செய்முறையையும் ஒவ்வொரு வாரமும் சுவைபட விவரிக்கிறார்.

வித்யா சுப்ரமணியம்

வித்யா சுப்ரமணியம்

1983-ம் ஆண்டு ‘முதல் கோணல்’ என்ற மங்கையர் மலர் நெடுங்கதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானவர். அதன்பின், பல்வேறு இதழ்களிலும் எழுத்துப் பயணம் தொடர்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், தொடர்களும் எழுதியிருக்கிறார். தமிழக அரசு விருது, இருமுறை இலக்கிய சிந்தனை பரிசு உள்ளிட்ட பல்வேறு விருகளும் பரிசுகளும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் மட்டுமின்றி ‘உப்புக்கணக்கு’ என்ற வரலாற்றுப் புதினமும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் உண்டு. 

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை