ரெடி.. ஸ்டெடி.. கோ..

டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.

டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.

இந்த மண்ணில் பிறந்த அனைவரும் சமமான ஆற்றல் உடையவர்கள்தான். ஆனால் ஒரு சிலர் மட்டும் எப்படி தேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆகிறார்கள்? நமக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் நம்மைப்போல் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்களால் மட்டும் எப்படி சாதனைகள் செய்ய முடிகிறது. இந்த ஒரு சிந்தனைதான் என்னை ஸ்போர்ட்ஸ் மெடிஸன் என்ற துறைக்கு அழைத்து வந்தது. நான் இந்தத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறேன். இத்தனை வருடங்களில் வெவ்வேறு விளையாட்டு சேர்ந்த சிறந்த வீரர்களுடன் பணி  புரிந்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு சிறந்த வீரரிடமும் மேலே சொன்ன விஷயத்துக்கும் பதில் இருந்தது. அந்த விஷயத்தை இந்தத் தொடரின் மூலம் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

***

உங்கள் குழந்தையை விளையாட்டு வீரர் ஆக்க வேண்டுமா? அப்படியென்றால், இத்தொடர் உங்களுக்குப் பலவிதங்களில் உதவிகரமாக இருக்கும். அதாவது, ஒரு விளையாட்டு வீரன்/வீராங்கனை எப்படி உருவாக்கப்படுகிறான்(ள்) என்பதை இடத்தொடரில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

விளையாட்டுத் திறன் கணிப்பு, விளையாட்டுத் திறன் மேம்பாடு, குறிப்பிட்ட விளையாட்டுக்கான சிறப்புக் கவனம், விளையாட்டு நுணுக்கங்கள், விளையாட்டு உபகரணங்கள், உணவு முறை, உளவியல் முறைகள் மற்றும் உளவியல் நுணுக்கங்கள், கவனம் சிதறாமை, உடற்பயிற்சி, விளையாடும்போது ஏற்படும் காயங்கள், கிரியாஊக்கி மருந்துத் தடைகள், விமரிசனங்களை எதிர்கொள்ளும் திறன், தன்னம்பிக்கை, வருமானம், விளையாட்டுக்குப் பிறகான வாழ்க்கை என ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கைக்குப் பின் இத்தனை காரணிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் பற்றியும் விரிவாக இத்தொடரில் பார்க்கப்போகிறோம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை