தனியே உதிரும் பூக்கள்

தனியே உதிரும் பூக்கள்

சங்க இலக்கியத்தின் தாக்கத்தை காப்பியங்களிலும், பக்தி இலக்கியத்திலும், கம்பனிலும், பாரதியிலும் பார்க்க முடியும். அந்தத் தடங்களின் வழியே நடைபோடுவது ஒரு சந்தோஷமான அனுபவம். அப்படி ஒரு தேடல்தான் இந்தக் கட்டுரைகள்.

சங்க இலக்கிய காலம் 300 BC - 200 AD என்று பலரால் ஆராயப்பட்டு இருக்கிறது. பாசுரங்களும், பதிகங்களும் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்டன. கம்பர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவ்வளவு இடைவெளி இருந்தும், சங்க கால உவமைகளையும், கற்பனைகளையும் பிற்கால இலக்கியங்களில் காண முடிகிறது. இவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. எளிய தமிழில் சங்க இலக்கியத்தின் தடங்களை; தமிழர் நாகரிகத்தின் இந்தச் சங்கிலிக் கண்ணிகளை; சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளைத் தேடும் ஒரு சிறிய முயற்சி.

ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவதுபோல் இதுவும் சுகமானதே.

கணேஷ் லட்சுமிநாராயணன்

கணேஷ் லட்சுமிநாராயணன்

சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியலில் B.E. பட்டமும், அமெரிக்காவின் ஆன்ஆர்பர் பல்கலைக் கழகத்தில் (University of Michigan, AnnArbor) MBA பட்டமும் பெற்றவர்.

அமெரிக்காவிலும், இந்தியாவிலும், பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். டெல் (Dell) கம்பெனியில் பல வருடங்கள் பணியாற்றி, அதன் இந்தியக் கிளைக்கு நிர்வாக இயக்குநராக (President & MD) உயர்ந்தார். தற்போது, பெங்களூரில் வசிக்கும் கணேஷ், பல துவக்க நிலை (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

இத்தொடர் குறித்த அவரது கருத்து.. ‘பழந்தமிழ் இலக்கியத்தைப் புதிதாகப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு மாணவன் நான். பாடலை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, புரிந்து செய்த செயல் அல்ல என் எழுத்து. அப்பாடல்களை இக்காலத்துக்குப் பொருத்திப்பார்க்கும், அந்த இலக்கியத்தின் காலம் கடந்தும் தொடரும் தடங்களை ரசிக்கும் குழந்தையின் கிறுக்கல்கள் போன்ற ஒரு முயற்சியே இது. இலக்கியம் மூலம் தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை அறிந்து கொண்டாட ஆசை. A.K. ராமானுஜன் கூறியதுபோல், ‘Even one’s own tradition is not one’s birthright; it has to be earned, repossessed’. ‘எனது பிறப்புரிமையை மீட்டெடுக்கும் கனவோடு.. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற மகாகவிக்கு மனமார்ந்த நன்றிகளோடு..’

கணேஷ் எழுதியுள்ள ‘வாகையடித் தேடல்’, ‘தாமிரபரணி என்னும் சிநேகிதி’ ஆகிய இரண்டும் விரைவில் வெளியாக உள்ளன.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை