யதி
யதி - ஒரு நாவல்.
இது சன்னியாசிகளின் உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிற நாவல். காவி அணிந்தவர்கள், அணியாதவர்கள், தாடி வைத்தவர்கள், வைக்காதவர்கள், மடம் கட்டி ஆள்கிறவர்கள், மந்திரவாதிகள், வேதம் சொல்கிறவர்கள், யோகம் செய்கிறவர்கள், சித்தர்கள், ரிஷிகள், வியாபாரிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், பணம் செய்பவர்கள், பாவம் செய்பவர்கள், பாவிகளைக் கடைத்தேற்றுகிறவர்கள் - எத்தனை எத்தனையோ ரகம். எத்தனை எத்தனையோ மனிதர்கள்.
மனிதர்கள்தாம். யாரும் கடவுள் இல்லை. ஆனால் எல்லோருக்கும் கடவுளைச் சந்திக்கும் விருப்பம் எப்போதாவதேனும் இருந்திருக்கிறது. சிலருக்குக் கடவுளாகும் விருப்பம்.
இந்திய மண்ணில் இதில் ஏதேனும் ஒரு ரகத்தைச் சேர்ந்த சன்னியாசியையாவது வாழ்வில் எதிர்கொள்ளாத பிறப்பு ஏதுமில்லை. பக்தராகவோ, ஆதரவாளராகவோ, பின்பற்றுபவராகவோ, எதிர்ப்பவராகவோ, முகத்திரை கிழிப்பவராகவோ ஏதேனும் ஒருவிதத்தில் ஒரு சன்னியாசியையாவது நாம் கடந்து செல்கிறோம்.
இந்த சன்னியாசிகளின் உலகுக்குள் முற்றுமுழுதாக அலைந்து திரிகிறது இந்நாவல். ஒரு கதையல்ல இது. ஒரு பெரும் வம்ச சரித்திரம்.
167 நாள்களாகத் தொடர்ந்து வெளியாகி தினமணி இணையதள வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந் நாவலை, விரைவில் புத்தக வடிவில் பார்த்துப் படிக்கக் காத்திருங்கள்!
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்