யோகம் தரும் யோகம்

நம் நாட்டின் பாரம்பரியமிக்க அஷ்டாங்க யோகத்தில் எட்டு அங்கங்கள் உள்ளன. பதஞ்சலி முனிவர் உருவாக்கிய இந்த மனவளக் கலை இன்று உலக மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று பயிலப் பெற்று வருகிறது.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அங்கங்களும், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள்.

மனிதனிடத்தில் ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் என மூன்று குணங்கள் உள்ளன. பகுத்தறிவு உள்ள மனிதன், தன்னிடம் உள்ள குணங்களை அறிந்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அதாவது, அழிவை நீக்கி ஆக்கத்தைப் பெருக்க வேண்டும். அதற்கு, தன்னைத்தானே அறிந்து பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், எட்டு அங்கங்களில் ஒன்றான ஆசனம், உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தும் பயிற்சி முறை.

‘யோகம் தரும் யோகம்’ என்ற இந்தச் சிறப்புப் பகுதியில், உட்கார்ந்த நிலை, படுத்த நிலை, நின்ற நிலை, மண்டியிட்ட நிலை என எளிய முறையிலான ஆசனங்களும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன்கள் என்பதும் தெளிவாக விளக்கப்பட உள்ளன.

ஆசனங்களைக் குருவின் உதவியோடுதான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், தினமணி டாட் காம் ஒரு ‘குரு’வாக இருந்து உங்களுக்கு இந்த யோகாசனங்களைக் கற்றுத் தரும். ஆசனங்களைத் தொடங்கும் முன், உங்கள் உடல் நிலை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு தொடங்குவது நல்லது.

ஆசனங்களைச் செய்து, உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கே.எஸ். இளமதி

கே.எஸ். இளமதி

சென்னையில் உள்ள ‘யோகாசன ஆலய’த்தில், யோகா கற்றுக்கொண்டவர். யோகா, பிராணாயாமம், தியானம் சார்ந்த பத்துப் புத்தகங்களை எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யோகாவில் பட்டயம் பெற்றுள்ளார். மனைவி சிவகாமியை பதிப்பாளராகக் கொண்டு ‘பிராணாயாமம்’ என்ற மாத இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். இவரது வாரிசுகளான பிரியா, பாலாஜி இருவரும்கூட யோகாசன ஆசிரியர்களாகப் பயிற்சி அளித்து வருகின்றனர். தொடர்புக்கு – 044-45501160, 9940588046, 99405 87973. மின்னஞ்சல்கள் - ksilamathy@gmail.com, sooryanamashkar@gmail.com, pranayamamyoga@gmail.com.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை