காவிரியில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும்: நல்லக்கண்ணு

முறையற்ற வகையில் மணல் அள்ளுவதில் திமுக ஆட்சியில் என்ன சூழ்நிலை நிலவியதோ அதே சூழ்நிலைதான் இப்போதும் உள்ளது. இதுதொடர்பாக அரசின் ...
காவிரியில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும்: நல்லக்கண்ணு

திருச்சி, ஜூன் 13: காவிரி ஆற்றில் மணல் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. மேலும் முறையற்ற வகைகளில் மணல் அள்ளுவதை அரசு வேடிக்கை பார்க்காமல் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு.

ஆற்று மணல் கொள்ளை போவது தொடர்பான புகைப்பட கண்காட்சி ஒன்று இன்று திருச்சியில் நடைபெற்றது.

” கொள்ளைபோகும் மணல், பதறும் நெஞ்சங்கள் ” என்ற அந்தப் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்த நல்லக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.

காவிரி ஆற்று மணல் திருட்டு பலவிதங்களில் நடக்கிறது. அளவுக்கு அதிகமாக நடைபெறும் இந்த மணல் திருட்டால் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இயந்திரங்களை வைத்து மணல் அள்ளப்படுவதால்,

நிலத்தடி நீர் மட்டம் குறைவு, குடிநீர் பாதிப்பு, விவசாயத்துக்கு நீர் இல்லாமல் போதல் என பலவித சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இது தொடர்பாக மதுரையிலுள்ள உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதி மீறல்களைத் தடுக்க வேண்டும் என்று.அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். முறையற்ற வகையில் மணல் அள்ளுவதில் திமுக ஆட்சியில் என்ன சூழ்நிலை நிலவியதோ அதே சூழ்நிலைதான் இப்போதும் உள்ளது. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றால், மணல் திருட்டு தொடர்பாக 4800 வழக்குகள் போடப்பட்டுள்ளன என்று அரசு சொல்கிறது. ஆனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்ததுபோல் தெரியவில்லை. மணல் முறையற்ற வகையில் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. 1 மீட்டர் வரைதான் ஆற்றில் மணல் அள்ளவேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் அதை மீறி 3 அல்லது 4 மீட்டர் ஆழத்தில் மணல் அள்ளுகின்றனர். இது ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிந்தேதான் நடக்கிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நல்லக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com