சேரன் மகள் தாமினி வழக்கு நாளை ஒத்திவைப்பு

சேரன் மகள் தாமினியை சட்டவிரோதமாக மைலாப்பூர் காப்பகத்தில் வைத்திருப்பதாகவும்,அவரது விருப்பபடி அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் சந்துருவின் தாயார் ஏஸ்வரி அம்மாள்

சேரன் மகள் தாமினியை சட்டவிரோதமாக மைலாப்பூர் காப்பகத்தில் வைத்திருப்பதாகவும்,அவரது விருப்பபடி அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் சந்துருவின் தாயார் ஏஸ்வரி அம்மாள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று பிற்பகல் நீதிபதிகள் வி.தனபால்,வி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சேரன்,அவரது மனைவி,மகள் தாமினி மற்றும் இரு தரப்பு வழக்குரைஞர்களிடம் தனித்தனியாக விசரணை நடைபெற்றது.அப்போது தாமினி தான் காதலன் சந்துருவுடன் செல்ல விரும்புவதாகவும்,தந்தை சேரனுடன் செல்ல விருப்பமில்லை என்று கூறினார்.பின்னர்  இந்த வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தாமினி மூத்த வழக்குரைஞர் என்.ஜி,ஆர் பிரசாத் வீட்டில் தங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இயக்குனர் சேரனுடன் ஆர்.கே.செல்வமணி,கரு.பழனியப்பன்,அமீர்,விக்ரமன் போன்றோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com