விமானத்திலிருந்து இயக்கக்கூடிய ஏவுகணை ஆராய்ச்சி நடந்து வருகிறது: சிவதாணு பிள்ளை

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சிவதாணு பிள்ளை ராமேஸ்வரம் அப்துல் கலாமின் வீட்டிற்கு வருகை தந்து வீட்டில் முழுவதும் சூரிய சக்தியில் இயங்ககூடிய சோலார் பேனலை

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆ.சிவதாணு பிள்ளை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிற்கு வருகை தந்து வீட்டில் முழுவதும் சூரிய சக்தியில் இயங்ககூடிய சோலார் பேனலை துவக்கி வைத்தார்..பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ராணுவத்தில் நிலத்திலிருந்து செல்லும் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் கப்பலிருந்து செலுத்தும் ஏவுகணைகளும் ராணுவத்திடம் ஓப்படைக்கப்பட்டது. விமானத்திலிருந்து இயக்கக்கூடிய ஏவுகணை குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி 2014ம் ஆண்டு வரை நீடிக்கும்.இந்த ஏவுகணைப் பணி முடிந்தால் நிலம், நீர், வானம் ஆகியவற்றில் செல்லக் கூடிய ஏவுகணைகளை கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.விமானத்திலிருந்து இயக்கும் ஏவுகணைகளை வளரும் நாடுகள் கேட்கிறார்கள். பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லக் கூடியது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com