கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்: தபால்காரர்கள் கோரிக்கை

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர்கள் மற்றும் பன்திறன் ஊழியர்கள் (எம்.டி.எஸ்) அஞ்சல் ஊழியர்களின் தேசிய சங்கம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு

தபால்காரர்களின் பிரச்னையைப் போக்க கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர்கள் மற்றும் பன்திறன் ஊழியர்கள் (எம்.டி.எஸ்) அஞ்சல் ஊழியர்களின் தேசிய சங்கம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்டச் செயலாளர்கள் ஜெயராஜ், மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தபால்காரர்கள் பிரச்னைகள் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி பரிந்துரைகளின்படி கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தபால்காரர்கள் வேலை அளவீடுகள் மாற்றி அமைக்க வேண்டும். மக்கள்தொகை நெருக்கமாக உள்ள பகுதியின் டெலிவரி அளவீடு பற்றி தெளிவாக ஆணை வெளியிட வேண்டும். தபால்காரர்களின் பீட்டுகள் விஞ்ஞான முறைப்படி அளவிடப்பட வேண்டும். பன்திறன் ஊழியர்களுக்கு பணிக்கேற்ப சைக்கிள் அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும். மெட்ரோ நகரங்களில் உள்ள நோடல் டெலிவரி சென்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com