ஆத்தூர் அருகே கார் - லாரி மோதல்: இருவர் சாவு

ஆத்தூர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.

ஆத்தூர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.

 விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். குடும்பத்துடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற சுந்தர்ராஜன் கார் மூலம் சனிக்கிழமை நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை சுந்தர்ராஜின் உறவினர் சேட்டு (34) ஓட்டினார்.

 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் பகுதியில் இவர்களது கார் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் சென்ற போது, சென்னையில் இருந்து சேலத்திற்கு பாரம் ஏற்றிய கொண்டு வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.

 இந்த விபத்தில், கார் ஓட்டுநர் சேட்டு (34). சுந்தர்ராஜின் மகன் செளந்தரராஜ் (15) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த

சுந்தர்ராஜின் மனைவி, 2 மகன்கள், கார் ஓட்டுநர் சேட்டுவின் மனைவி ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர்.

 காயம் அடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவழிப்பாதையில் தொடரும் விபத்துகள்:

 ஆத்தூர் நகரில் இருந்து சேலம் நோக்கி வரும் வாகனங்கள் இருவழிப்பாதையில் 5 கிலோமீட்டர் தூரம் கடந்த பின்னர் செல்லியம்பாளையம் என்ற பகுதியில் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும்.

  அதேபோல், ஆத்தூர் நகரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இருவழிப்பாதையில் 3 கிலோமீட்டர் தூரம் கடந்து துளுக்கனூர் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அடைய முடியும்.

  துளுக்கனூரில் இருந்து ஆத்தூர் வழியாக செல்லியம்பாளையம் பகுதி்க்குச் செல்ல மொத்தம் 8 கிலோமீட்டர் தூரம் ஆகிறது. குறுகலான உள்ள இந்த இருவழிப்பாதையைக் கடந்து செல்லும் வாகனங்கள் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன.

 இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த சாலை பகுதி அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.

 நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதன் மூலம் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால் 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என ஆத்தூர் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com