கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குருப் பெயர்ச்சி விழா

கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

 குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி பசுபதீசுவரர் கோயிலில் நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு சிறப்பு ஹோமம், லட்சார்ச்சனை நடைபெற்றது. முன்னதாக 27-ம் தேதி காலை 8 மணிக்கு நவக்கிரக அபிஷேகம், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், லட்சார்ச்சனை நடைபெற்றது.

  புதன்கிழமை மாலை லட்சார்ச்சனை நிறைவு பெற்று நவக்கிரக மூர்த்திகளுக்கும், குருபகவானுக்கும் மூல மந்ர யாகமும் தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது. இரவு 9.10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  பரிகார ராசியான மேஷம் ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், கடகம் ராசியில் புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம், கன்னிராசியில் உத்திரம் 2, 3, 4-ம் பாதம், அனுசம், கேட்டை, மகர ராசியில் உத்திராடம், 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1 2-ம் பாதங்கள், மீனம் ராசியில் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உடையவர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் முருகன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com