தமிழ் வார்த்தைகள் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்தான்: பேரரசு
By | Published On : 26th January 2013 11:57 AM | Last Updated : 26th January 2013 01:58 PM | அ+அ அ- |

தமிழ் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் காணமல் போக காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்தான் என்று திரைப்பட இயக்குநர் பேரரசு குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீஹரி மூவிஸ் சார்பில் பி.பாரதிமோகன் தயாரித்து, டைரக்ஷன் செய்துள்ள படம் 'அருவிக்கரையோரம்'. இந்தப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசியதாவது:
இப்போது வருகின்ற திரைப்பாடல்கள் நூற்றுக்கு தென்னூற்றி ஒன்பது பாடல்களில் தமிழ் வார்த்தைகள் குறைந்து, ஆங்கில வார்த்தைகள் அதிகம் இடம் பெற்று வருகின்றன. இது வருந்த தக்க விஷயம்.
எம்.எஸ்.விஸ்வநான் காலத்திலும், அதன் பிறகு இளையராஜா வந்த பிறகும் பாடல்களில் டியூன் தன்மை மாறியிருந்தது. ஆனால் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் இருக்கும். இப்போது அது இல்ல. இப்படி வருவதற்கு பாடலாசிரியர்கள்தான் பொறுப்பு என்று கூற முடியாது. இசையமைப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இதில் பொறுப்பு இருக்குகிறது.
தமிழில் தலைப்பு வைத்தால்தான் வரிச் சலுகை என்று சொன்ன பிறகு தமிழில் தலைப்புகள் வைக்க ஆரம்பித்தார்கள். அதே போல பாடல்களில் தமிழ் வார்த்தைகள் வருவதற்கும் வழி வகை செய்ய வேண்டும் என்று கூறினார்.