திண்டுக்கல் அருகே சுற்றுலா ரயிலில் தீ விபத்து: ஒருவர் காயம்
By நங்கையர்மணி | Published On : 19th July 2013 11:05 AM | Last Updated : 19th July 2013 11:05 AM | அ+அ அ- |

வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சுற்றுலா ரயில் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அது, திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைக் கடந்தபோது ஒரு பெட்டியில் சிலிண்டர் வெடித்தது. இதில், தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரயிலில் இருந்த ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.