ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: ஐக்கிய ஜனதா தளம் மீது பாஜக புகார்
By dn | Published On : 14th June 2013 08:03 PM | Last Updated : 14th June 2013 08:03 PM | அ+அ அ- |

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு பிகார் மாநில அரசின் கல்வித் துறை அனுமதி மறுத்துவிட்டதாக, அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிகாரிஸ் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜகவின் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவி அளிக்கப்ட்டதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தளம்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.