வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல்: வரும் 17 முதல் வேட்புமனு தாக்கல்

வக்ஃபு வாரிய உறுப்பினர் தேர்தலுக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரிவுகளுக்கு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 17-ம் தேதி

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வரும் 17 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் அலுவலர் க.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:

வக்ஃபு வாரிய உறுப்பினர் தேர்தலுக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரிவுகளுக்கு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 17-ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 24 கடைசி. வேட்பாளர் இறுதிப் பட்டியல் ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்படும்.தேர்தல் அவசியமாக இருந்தால், ஜூலை 6 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். சென்னையில் உள்ள வள்ளல் சீதக்காதி நகரில் ஜாபர்சிராங் தெருவில் உள்ள தமிழ்நாடு  வக்ஃபு வாரிய அலுவலகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று அருள்மொழி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com