காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரம்மோத்வசத்திற்கான பந்தல்கால் முகூர்த்தம்

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிம்மோத்சவத்திற்கான பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிம்மோத்சவத்திற்கான பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறும் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் பிரம்மோத்சவ விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி கூறியது : பிரம்மோத்சவத்தையொட்டி வருகிற 13 முதல் 15-ம் தேதி வரை எல்லை தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 16- ம் தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 17-ம் தேதி முறைப்படி பிரம்மோத்சவ தொடக்கத்தையொட்டி கொடியேற்றம் நடைபெறுகிறது.

தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் விதியுலாவும், 25-ம் தேதி புதிதாக செய்யப்பட்ட தேரோட்டம் நடைபெறுகிறது. 26-ம் தேதி பங்குனி உத்தர தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27-ம் தேதி சண்டிகேஸ்வரர் புறப்பாடும், 28-ம் தேதி காரைக்கால் அம்மையார் குளத்தில் தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது.

கோவிலில் கடந்த  2011-ம் ஆண்டு சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்காக புதிதாக பூத வாகனம் தயார் செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு காமதேனு வாகனம் தயார் செய்யப்பட்டது. நிகழாண்டு கற்பக விருட்சம் தயார் செய்யப்பட்டு சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com