தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த நடவடிக்கை: பிரதமர்
By | Published On : 08th March 2013 05:15 PM | Last Updated : 08th March 2013 05:15 PM | அ+அ அ- |

நாட்டு நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
மாநிலங்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது இதனைக் கூறினார்.