ரஜௌரியில் பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்து 15 பேர் பலி
By | Published On : 08th March 2013 07:10 PM | Last Updated : 08th March 2013 07:10 PM | அ+அ அ- |

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று, மலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பலியாயினர். 24 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஜௌரியில் இருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்தது அந்த பஸ். சாலையில் இருந்து சறுக்கி, ரஜௌரி மாவட்டம் மந்திர் கலா பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்து இன்று மதியம் நிகழ்ந்தது. விபத்து குறித்து மாநில சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சௌத்ரி முகம்மது ரம்ஸான், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், ரஜௌரி-பூஞ்ச் பகுதி டிஐஜி தலைமையில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.