முகப்பு தற்போதைய செய்திகள்
இசைப்பிரியா படுகொலை வீடியோ உண்மையானதுதான்: ப.சிதம்பரம்
By | Published On : 02nd November 2013 11:28 AM | Last Updated : 02nd November 2013 11:31 AM | அ+அ அ- |

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என்று கூறினார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக வந்திருந்த ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாம் கருணாநிதிக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.
இலங்கையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதாகக் காட்டப்படும் சேனல் 4 வீடியோ உண்மையானதுதான் என்று கூறிய ப.சிதம்பரம், இந்தப் படுகொலை மனித உரிமையை மீறிய செயல் என்றார். மேலும் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று வேதனை தெரிவித்த அவர், இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.