மதிமுக சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
By dn | Published On : 17th October 2013 10:35 AM | Last Updated : 17th October 2013 10:35 AM | அ+அ அ- |

மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக “நாடாளுமன்றத்தில் வைகோ” என்ற தலைப்பில் மூன்று கட்டப் பேச்சுப் போட்டிகளை நடத்துகிறது.
முதல் கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மூன்று மாணவர்களுக்கு முறையே ரூ.5,000; ரூ.3,000; ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதில் வெற்றிபெற்ற மூவரும் 24.11.2013 ஞாயிறு அன்று நடைபெறும் மண்டலப் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். அதில் வெற்றி பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.6,000; ரூ.4,000; ரூ. 2,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
11 மண்டலங்களில் முதல் மூன்று இடம் பெறும் 33 மாணவர்களும் 22.12.2013 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பார்கள்.
மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 1 இலட்சம்; ரூ. 50 ஆயிரம்; ரூ. 25,000 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மொத்தப் பரிசுத் தொகை ரூ. 7 இலட்சம் ஆகும்.
மாநில பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுத் தொகையையும், மாவட்ட, மண்டல, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் 120 மாணவ-மாணவியருக்கு “நற்றமிழ் நாவரசு” விருதினையும், போட்டியில் பங்கேற்ற அனைத்துப் மாணவ பேச்சாளர்களுக்கும் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் 05.01.2014 அன்று காலை 10 மணிக்கு திருச்சி தேவர் அரங்கில் நடைபெறும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ வழங்குவார்.
மேலும் விவரங்கள் அறிய 94433 70232; மின்னஞ்சல்: rajendranmdmk@gmail.com.