வனப் புகைப்படக் கலைஞர் விருது வென்ற 14 வயது இந்திய சிறுவன்
By dn | Published On : 17th October 2013 01:54 PM | Last Updated : 17th October 2013 02:04 PM | அ+அ அ- |

2013ஆம் ஆண்டுக்கான இளைஞர் வனப் புகைப்படக் கலைஞர்களுக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த 14 வயது உதயன் ராவ் பவார் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் நேட்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் பிபிசி வோர்ல்ட் வைட்டுடன் இணைந்து வழங்கும் இந்த விருதினை, மத்தியப் பிரதேச மாநிலம் சம்பல் நதியில் ஒரு முதலை, தனது 11 குட்டிகளை தலையில் சுமந்தபடி செல்வதை எடுத்த உதயன் ரோ பவார் வென்றுள்ளார்.