ஆண்டிமடம் பாஜக வேட்பாளர் மனு போலி கையொப்பம் மூலம் வாபஸ்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கட்டதூரைச் சேர்ந்த கே.சின்னப்பிள்ளை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் 12-வது வார்டு உறுப்பினர்

பாஜக வேட்பாளரின் வேட்பு மனுவை போலி கையொப்பமிட்டு  வாபஸ் பெற்றதால் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கட்டதூரைச் சேர்ந்த கே.சின்னப்பிள்ளை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் 12-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதியன்று அதிமுகவைச் சேர்ந்த செல்வியா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

நான் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிமுகவினரே எனது கையொப்பத்தை போட்டுள்ளனர். ஆனால், மனுவை நான் திரும்பப் பெறவில்லை. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு திங்கள்கிழமை (செப்.15) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com