பாலுமகேந்திரா மறைவு: கவிஞர் வைரமுத்து இரங்கல்

இந்த உலகத்தை  அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.தன்னை அழகாகக் காட்டியவர்

இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த உலகத்தை  அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.தன்னை அழகாகக் காட்டியவர் இன்றில்லையே என்று கண்கள் இருந்தால் நிலா அழும் வாய் இருந்தால் பூ புலம்பும்.சூரியனைப் பனித்துளியாகவும் பனித்துளியைச் சூரியனாகவும் நிறப்பிரிகை செய்த ஒளிப்பதிவு மேதை அவர்.

பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி மட்டுமல்ல, அவர் ஓர் இலக்கியவாதி. உலகத்தின் தலைசிறந்த படைப்புகளையெல்லாம் காதலோடு கற்றவர். அந்த இலக்கியச் சாரங்களை வெள்ளித்திரையில் பிம்பப்படுத்தியவர். மூன்றாம் பிறை  உன் கண்ணில் நீர் வழிந்தால்  நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் அவருக்கு நான் பாடல் எழுதிய நாட்கள் சுகமானவை. மனித மனங்களின்  இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். தம் ஒளிப்பதிவின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை இந்திய உயரத்திற்கு ஏற்றியவர் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com