ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 350-க்கும் மேற்பட்டோர் சாவு
By dn | Published On : 03rd May 2014 09:28 AM | Last Updated : 03rd May 2014 09:46 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானின் பாதாக்ஷன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. ஆப்கனின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் 300-க்கும் அதிகமான வீடுகளும் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 2,000 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், அந்நாட்டின் பாதாக்ஷன் மாகாணத்திலுள்ள ஹோபோ பரிக் என்ற கிராமமே புதையுண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் உயிர்பிழைந்தவர்களைக் காப்பாற்றவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், ஐ.நா. மற்றும் தொண்டு அமைப்புகளின் உறுப்பினர்களும் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஏற்கெனவே அங்கு உள்ள மீட்புக் குழுவினர் மிட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.