திருவிடைக்கழி சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள புகழ் பெற்ற திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில்  பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள புகழ் பெற்ற திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில்  பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு தமிழகத்தின்  பல பகுதிகளிலிருந்தும் முக்கிய விசேஷ தினங்களில் திரளான அளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெறும்.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை  சுப்ரமணியர்,தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் திரளான அளவில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 29 வது ஆண்டாக நாகை அருகே உள்ள சிக்கல் முருகன் கோவிலிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  நாகை,நாகூர்,காரைக்கால்,பொறையாறு வழியாக பாதயாத்திரையாக திருவிடைக்கழி சுப்ரமணிய சுவாமி  கோயிலுக்கு வந்தனர்.கடந்த புதன்கிழமை  தொடங்கி வெள்ளிக்கிழமை  காலை பாதயாத்திரை பக்தர்கள் திருவிடைக்கழி வந்து சேர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com