திருக்கடையூர் கோயிலுக்கு பக்தர்களின் காணிக்கையாக அளிக்கப்பட்ட புதிய யானை

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்களின் காணிக்கையாக புதிதாக அளிக்கப்பட யானை

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்களின் காணிக்கையாக புதிதாக அளிக்கப்பட்ட யானை திங்கள்கிழமை கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

திருக்கடையூர் கோயிலில் சுமார் 24 ஆண்டுகளாக இருந்து வந்த யானை அபிராமி உடல் நலக் குறைவால் கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ந்தேதி உயிரிழந்தது.அதனைத் தொடர்ந்து இக்கோயிலில் யானை இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில் பக்தர்களின் காணிக்கையாக புதிய யானை ஒன்று அளிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.அதனைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலிருந்து பத்மாவதி என்ற 11 வயது கொண்ட யானை திருக்கடையூர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அசாமிலிருந்து அழைத்து வரப்பட்ட யானை முன்னதாக தருமபுரம் ஆதீனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது.அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லாசியுடன் திருக்கடையூர் கோயிலுக்கு அழைத்து  வரப்பட்டது.கோயிலின் நான்கு வீதிகளையும்,கோயில் பிரகாரங்களையும்  சுற்றி வரச் செய்து சிவாச்சார்யார்களால் கணபதி ஹோமம்,அஷ்ட கஜ பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து விநாயகர்,அமிர்தகடேஸ்வரர்,கால சம்ஹார மூர்த்தி,அபிராமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பத்மாவதி என்ற யானைக்கு அபிராமி என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.தொடர்ந்து யானைக் கொட்டகையில் யானை விடப்பட்டது.கோயில் நிர்வாகிகள்,முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com