போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு: பஸ் போக்குவரத்தில் சிக்கல்

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பஸ் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பஸ் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போடி பகுதியில் பெய்த தொடர் மழையினால் போடிமெட்டு மலைச்சாலையில் 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே புதன் கிழமை இரவு பாறை, மண் சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழக-கேரளா இடையே போடிமெட்டு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேலும் போடி வழியாக மூணாறு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டன. இரவு நேரத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சில சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போடிமெட்டு மலைச்சாலையில் சிக்கிக்கொண்டன.

இதனையடுத்து போடி டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் போஜூ மற்றும் போலீஸார் போடிமெட்டு மலைச்சாலையில் சிக்கிய வாகனங்களை மீட்டு திருப்பி அனுப்பினர். மேலும் சில சுற்றுலா வாகனங்கள் போடி முந்தல் சோதனை சாவடியிலேயே நிறுத்தப்பட்டன. இவர்கள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.இதனையடுத்து வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பாறைகள் சரிந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை வரை ஒரு பாறை உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஜீப் உள்ளிட்ட சிறிய ரக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. மற்றொரு ராட்சத பாறை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பாறை உடைக்கும் பணி வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் சூழல் உள்ளதாகவும், அதன் பின்னரே போடிமெட்டு மலைச்சாலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் ஒருவரான குட்டியான் தெரிவித்தார்.

இதனிடையே போடிமெட்டு மலைச்சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கேரள பகுதியிலிருந்து வீரபாண்டி திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்கள், குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்க்க வந்து செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com