செத்துவிட்டான் பெருமாள் முருகன் : சமூக தளத்தில் எழுத்தாளரின் உருக்கமான அறிக்கை

மாதொருபாகன் நூல் பிரச்னை காரணமாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது சமூக தளத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நூலில் சில
செத்துவிட்டான் பெருமாள் முருகன் : சமூக தளத்தில் எழுத்தாளரின் உருக்கமான அறிக்கை

மாதொருபாகன் நூல் பிரச்னை காரணமாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது சமூக தளத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நூலில் சில கருத்துக்களுக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பிரச்னை பெரிதானதால், பெருமாள் முருகன் அதற்காக மன்னிப்புக் கோரினார். மேலும், தனது நூல்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டான். அவனுக்காக தற்போது பெ. முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

பெருமாள் முருகன் இனி உயிர்தெழப் போவதில்லை, மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ. முருகன் மட்டுமே உயிர் வாழ்வான்.

அவனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. மாதொருபாகன் நூல் பிரச்னை முடிந்துவிடப்போவதில்லை. இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் பிரச்னைகள் எழுந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com