ஆண்டிபட்டியில் வேட்டை நாய் தாக்கி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சாவு
By பாண்டி | Published On : 27th March 2015 04:12 PM | Last Updated : 27th March 2015 04:12 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை நாய் தாக்கியதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலே பலியானது மேலும் சில ஆடுகள் காயமுற்றது.
ஆண்டிபட்டி பகுதியில் வேட்டைக்கு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்ந நாய்கள் விட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கி காயப்படுத்தி வருகிறது. இந்நிலையில் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி (45) என்பவர் 20 க்கு மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை காலையில் திம்மரசநாயக்கனூர் பகுதியில் உள்ள நாழிமலைபகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து சென்றிருக்கிறார்.
அப்போது வேட்டைக்கு பயன்படுத்தும் நான்கு நாய்கள் ஆடுகளை தூரத்தி சென்று தாக்கியிருக்கிறது. இதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலே பலியானதாம். மேலும் 5 மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளது. இது குறித்து முத்துச்சாமி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.