இந்திய முறை படிப்புகளுக்கு 1,840 பேர் விண்ணப்பம்

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை படிப்புகளுக்கு இதுவரை 1,840 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை படிப்புகளுக்கு இதுவரை 1,840 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது.

 சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது.

 இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகளில் 356 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 21 தனியார் கல்லூரிகளில் 1000 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

 சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா- இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா கல்லூரி ஆகிய ஆறு அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

 தமிழக சுகாதாரத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் இதுவரை 3,950 பேர் இதுரை நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். இதுதவிர, இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

 இதனையடுத்து இதுவரை 1,840 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

 முதல்நாளான புதன்கிழமை 541 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாணவர்கள் இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 28-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 29-ஆம் தேதியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com